மாண்ட மருத்துவருக்கு சிதை நெருப்பு தர மனமில்லையா? சீனுராமசாமி ஆவேச கவிதை

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த ஆந்திர மருத்துவர் ஒருவரை தகனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என நேற்று முதல் அம்பத்தூர் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மயானம் அருகே இரவு பகலாக அந்த பகுதி மக்கள் காவல் காத்தும் உள்ளனர். கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் டாக்டர்களுக்கு கைதட்டிய பொதுமக்கள், கொரோனாவால் மரணம் அடைந்த ஒரு மருத்துவரை தகனம் செய்ய அனுமதிக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் ஆவேசமாக பதிவு செய்த கவிதை ஒன்று பின்வருமாறு:

உமைக காக்க
தொட்டுத்‌ தூக்கிய
மருத்துவன்‌ மாண்டான்‌
வாழவா வழி கேட்டான்‌
அந்தோ சிதை நெருப்பை
தானம்‌ கேட்டான்‌

தர மறுக்கும்‌
மனித மனமே
நீ கைசுத்தம்‌
செய்தல்‌ போல்‌
மனச்சுத்தம்‌ செய்வாயா?

சமபந்தி வைத்த வைத்தியனை
வைத்தெரிக்க கொள்ளி
இல்லையா...?

ஜாதி பார்த்தா
இனம்‌ பார்த்தா
மொழி பார்த்தா
வந்து வேக வைக்கிறது
கிருமி..

இருமாமல்‌
துப்பி விடு
உன்‌ ஜாதியை
உன்‌ மதத்தை

அய்யோ
கிருமி மனித
இனத்தை தேடுகிறது.

சீனுராமசாமியின் இந்த கவிதை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More News

தமிழ்ப்புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்!

இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டு தினத்தையும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் அம்பேத்கர் பிறந்த நாளையும் கொண்டாடி வரும் நிலையில் நடிகரும்

சென்னை ராயபுரத்தில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு: மற்ற இடங்களில் எப்படி?

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகவும், இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  1173

என்னால்‌ முடிந்தவரை உதவி வருகிறேன்: ராகவா லாரன்ஸின் தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பு!

நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூபாய் 3 கோடி அளித்திருந்த நிலையில் மேலும் பலர் தன்னிடம் தொலைபேசி

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்கள்!

இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றியபோது ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்

'மாஸ்டர்' மாளவிகாவுக்கு டப்பிங் குரல் கொடுத்த தமிழ் நடிகை

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரபரப்பு