சீனுராமசாமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 27 2019]

பிரபல இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'கண்ணே கலைமானே' திரைப்படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது. மேலும் அவரது இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த 'மாமனிதன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சீனுராமசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தை டைம்லைன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' உள்பட ஒருசில படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று டைம்லைன் நிறுவனம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.