சீனுராமசாமி இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,September 18 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, காயத்ரி, 'ஜோக்கர்' குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடித்த 'மாமனிதன்' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் சீனு ராமசாமி விரைவில் அந்த படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா மற்றும் கே புரடொக்சன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சீனு ராமசாமி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சீனுராமசாமி இயக்கும் அடுத்த படத்தை ஒலிம்பியா மூவீஸ் நிறுவனத்தின் அமித் குமார் என்பவர் தயாரிக்கவிருப்பதாக சீனு ராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஒலிம்பியா மூவீஸ் அமித்குமார் ஏற்கனவே ராஜுமுருகன் இயக்கிய 'ஜிப்ஸி' என்ற படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தற்போது சென்சார் சான்றிதழ் வாங்க முடியாமல் சிக்கியுள்ளது. இந்த படத்தில் உள்ள அதிக காட்சிகளை வெட்ட வேண்டும் என சென்சார் அதிகாரிகள் தெரிவித்து இருப்பதால் ரிவைசிங் கமிட்டிக்கு செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனு ராமசாமி மற்றும் கொலம்பியா பிக்சர்ஸ் இணையும் புதிய படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

7 பேர்களும் ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் டாஸ்க்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் இறுதி போட்டிக்கு ஒருவர் தேர்வு செய்யப்படும் டாஸ்க் ஆரம்பத்ததிலிருந்து ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு இறுதிப் போட்டிக்கான

'மாலை 4.30 மணிக்கு என் டார்லிங் நயன்தாரா' அட்லியின் 'பிகில்' டுவீட்

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது.

தர்ஷன் - கவின் திடீர் மோதல்: உடைகிறதா 'வி ஆர் பாய்ஸ்' அணி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷன் வெற்றி பெற வேண்டும் என கடந்த 75 நாட்களாக ஆதரவு கொடுத்து வருபவர் கவின். கவினின் நண்பர் பிக்பாஸ் வீட்டிற்க்குள் வந்து ஒரு அறைவிட்டவுடன்

இந்தி மொழி திணிப்பு: ரஜினியின் 'துரதிஷ்டவசமான' கருத்து

ஒரே நாடு ஒரே மொழி என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சமீபத்தில் இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்று பேசியதற்கு

19 வயது கல்லூரி மாணவி போலீசில் தஞ்சம்: பெற்றோர் மிரட்டுவதாக புகார்!

சென்னையை சேர்ந்த கல்லூரி 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனக்கும், தனது காதல் கணவருக்கும் பாதுகாப்பு தரவேண்டும் என போலீஸில் தஞ்சம் அடைந்துள்ளதாக வெளிவந்துள்ள் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது