விஜய்சேதுபதியை முந்திய அதர்வா

  • IndiaGlitz, [Thursday,September 28 2017]

தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சீனுராமசாமியின் 'தர்மதுரை' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படத்திலும் விஜய்சேதுபதியே நடிப்பார் என்று கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியானது

இந்த நிலையில் விஜய்சேதுபதி படத்திற்கு முன்னர் அதர்வா நடிப்பில் ஒரு படத்தை இயக்க சீனுராம்சாமி முடிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு 'ஒரு ஜீவன் அழைக்குது' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் அதர்வாவின் தந்தை முரளி நடித்த 'கீதாஞ்சலி' படத்தின் பாடல் ஒன்றின் வரி என்பது குறிப்பிடத்தக்கது

கிராமத்து பகுதியில் நடைபெறும் ஒரு த்ரில் சம்பவம் தான் இந்த படத்தின் கதை என்றும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் சீனுராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் வரும் ஆயுதபூஜை தினத்தில் இந்த படத்திற்கான பூஜை நடைபெறும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் சீனுராமசாமி கூறியுள்ளார்.

More News

சர்வதேச பிரபலத்தை கவர்ந்த கமல்ஹாசனின் கருத்து

கமல்ஹாசன் அரசியலில் இறங்க போவதாக அறிவிப்பு செய்ததும் முதலில் தமிழக அரசியல்வாதிகள் விமர்சனம் செய்தனர். தமிழகத்தை தாண்டி கேரள முதல்வர் மற்றும் டெல்லி முதல்வரை சந்தித்தார்

ஒருகோடி ரூபாய் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஓவியா தரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பதும், ரூ.50 லட்சம் பரிசை தட்டி செல்லும் அதிர்ஷ்டசாலி யார் என்பதையும் தெரிய் இன்னும் இரண்டு நாட்களே உள்ளது.

சிதைந்து போன முகம்! சிதையாத காதல்: உண்மைக்காதலுக்கு ஒரு உதாரணம்

திரைப்படங்களில் தொலைபேசியில் காதல், கடிதத்தில் காதல் என முகம் பார்க்காத பல காதல்கள் உண்டு. ஆனால் உண்மைக்காதலில் பெரும்பாலும் அழகு, பின்னணி சிலசமயம் சாதி, மதம் பார்த்த காதல் தான் உண்டு.

மேலாடை இன்றி சாமிபோல் அலங்கரிக்கப்படும் சிறுமிகள்: மனித உரிமை ஆணையத்தில் புகார்

மதுரை அருகே உள்ள வெள்ளலூர் என்ற பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா ஒன்றில் 7 சிறுமிகள் மேலாடை இல்லாமல் சாமி போல் அலங்கரிக்கப்படும்

ஜெயலலிதாவை அமைச்சர்கள் சந்தித்தார்களா? அப்பல்லோ நிர்வாகம் அதிரடி பதில்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் பார்த்ததாக கூறிய அமைச்சர்கள் தற்போது திடீரென பல்டி அடித்து ஜெயலலிதாவை யாருமே பார்க்கவில்லை என்று கூறினர்.