சீனு ராமசாமியின் 'கோழிப்பண்ணை செல்லத்துரை'.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், யோகி பாபு நடிப்பில் உருவான ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.
தமிழ் திரை உலகின் தரமான படைப்புகளை அளித்து வரும் இயக்குனர் சீனு ராமசாமியின் அடுத்த திரைப்படம் ’கோழிப்பண்ணை செல்லத்துரை’. யோகி பாபு முக்கிய வேடத்திலும் மற்றும் பல புது முகங்கள் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷன் சினிமா ஹவுஸ் நிறுவன தயாரிப்பாளர் அருளானந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு N.R.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இது குறித்து சீனு ராமசாமி கூறி இருப்பதாவது:
அன்பானவர்களுக்கு வணக்கம்,
உங்கள் ஆதரவு
வேண்டி எனது இயக்கத்தில்
9வது திரைப்படமாக
விஷன் சினிமா ஹவுஸ் தயாரித்திருக்கும்
கோழிப்பண்ணை செல்லதுரை
செப்டம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது
அன்பானவர்களுக்கு வணக்கம்,
— Seenu Ramasamy (@seenuramasamy) August 14, 2024
உங்கள் ஆதரவு
வேண்டி எனது இயக்கத்தில்
9வது திரைப்படமாக
விஷன் சினிமா ஹவுஸ் தயாரித்திருக்கும்
கோழிப்பண்ணை செல்லதுரை
செப்டம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வருகிறது. pic.twitter.com/aOBtzn7n9V
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com