முதல் ஷாட்டில் 28 டேக்.. மனிஷா யாதவ் குற்றச்சாட்டுக்கு சீனு ராமசாமி பதில்..!

  • IndiaGlitz, [Saturday,November 25 2023]

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் மன்னிப்பு கேட்டவுடன் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் திடீரென நடிகை மனிஷா யாதவ்வை அவமரியாதையாக நடத்தியதாக இயக்குனர் சீனு ராமசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்த தகவல்கள் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மனிஷா யாதவ் இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்

அதில் ‘சீனு ராமசாமியின் படத்தில் நடிக்கிறேன் என்று நான் எப்போது சொன்னேன்? முதல்முறையாக இதையெல்லாம் கேட்கிறேன். ’ஒரு குப்பை கதை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையில் சீனுராமசாமி இருந்ததால் எல்லோருக்கும் நன்றி சொல்வது போல் அவருக்கும் நன்றி சொன்னேன். ஆனால் எனக்கு நேர்ந்த எதுவும் மாறிவிடாது. 9 வருடங்களுக்கு முன் நான் சொன்ன வார்த்தைகள் உண்மை, என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவரோடு நான் ஏன் பணி புரிய வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் மனிஷா யாதவ் குற்றச்சாட்டுக்கு இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சில கேள்விகள் flash back

1) ’இடம் பொருள் ஏவல்’ படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள் ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மணிஷா,

2) படப்பிடிப்பு தளத்தில் உதவிட வந்த மூத்த நடிகை வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்?

3) விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பிலிம்ஸ் கணேஷ் அவர்கள் கேட்ட பொழுது ஏன் மறுத்தார் ?

4) என் சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்..?

5) மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஹோட்டலில் தன் தாயாருடன் தங்கியிருந்த மனிஷா அவர்களை கடைசி ஒரு நாள் காலையில் படப்பிடிப்பில் சந்தித்தேன்.

6) அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்கு காத்திருக்கிறேன். தெய்வம் அருளனும் இருப்பினும் உங்களோடு திரும்ப பணிபுரிய விரும்பினேன்.

என சீனுராமசாமி பதிலளித்துள்ளார்.