சிவகார்த்திகேயனை தோனியுடன் ஒப்பிட்ட பிரபல இயக்குனர்!

  • IndiaGlitz, [Sunday,August 16 2020]

தல தோனி அவர்கள் நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் என்பதும் அவரது முடிவிற்கு பலர் வருத்தத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் தோனியின் ஓய்வு குறித்து கூறியபோது ’எங்களை அதிகபட்சமாக உற்சாகப்படுத்தியதற்கும், மகிழ்வித்ததற்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. நீங்கள் எப்போதும் ஒரு அற்புதமான தலைவர் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் எங்களை ஆச்சரியப்படுத்த பல்வேறு உத்திகளைக் கையாண்டு உள்ளீர்கள். உங்களுடைய அடுத்த ஹெலிகாப்டர் ஷாட்டிற்காக காத்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்

சிவகார்த்திகேயனின் இந்த பதிவுக்கு இயக்குனர் சீனு ராமசாமி கூறியபோது ’சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த நீங்கள் பலருக்கு வழிகாட்டியாக உள்ளீர்கள். தோனி போல் நண்பர்களுக்கும் புதிதாக வருபவர்களுக்கும் நீங்கள் வாய்ப்பு அளித்து வருகிறீர்கள். நீங்கள் இருவரும் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்தவர்கள்’ என்று கூறியுள்ளார்

மேலும் தோனி ஓய்வு குறித்து சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

ஒரு வீரனுக்கு விடை தரவே முடியாது
மைதானத்தை விட்டு வெளியேறுவது என்பது வேறு
விளையாட்டை விட்டு வெளியேறுவது என்பது வேறு,
எப்போதும் கிரிக்கெட்டோடு இருங்கள்
இந்த தேசத்திற்கு கற்றுத்தாருங்கள்.
உங்கள் சாதனைகள் இளைய வீரர்களுக்கு பாடம்
எளியவர்கள் முயன்றால்
வெல்லலாம் என்கிற வேதம்.

சீனு ராமசாமி அவர்களின் இந்த சமூக வலைத்தள பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது