அரசியல் கூட்டணியால் 'கண்ணே கலைமானே' காட்சி ரத்து!
- IndiaGlitz, [Wednesday,February 20 2019]
பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக இணைந்துவிட்ட நிலையில் தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதேபோல் திமுக கூட்டணி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் சீனுராமசாமி தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீசுக்கு முன்னரும் அனைத்து கட்சி தலைவர்களுக்காக ஒரு சிறப்பு காட்சியை திரையிடுவது வழக்கம். அவரது முந்தைய படமான 'தர்மதுரை' படத்தை பல அரசியல் கட்சி தலைவர்கள் பார்த்து பாராட்டினர். ஆனால் வரும் 22ஆம் தேதி ரிலீஸாகவுள்ள 'கண்ணே கலைமானே' படத்திற்கு அரசியல் தலைவர்களுகான சிறப்புக்காட்சியை இயக்குனர் ரத்து செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
“என் எல்லாப் படங்களையும் சர்வக்கட்சித் தலைவர்களுக்கு சிறப்புக் காட்சியாகத் திரையிடல் செய்வதுண்டு. இம்முறை உதயநிதி, தமன்னா நடிப்பில் வரும் 22-ம் தேதி வெளியாகும் ‘கண்ணே கலைமானே’ படத்துக்கு அவ்வாய்ப்பில்லை. கூட்டணிகள் தீர்மானிக்கின்றன, ப்ரிவியூ காட்சிகளையும்” என சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
என் எல்லாப்படங்களையும் சர்வக்கட்சி தலைவர்களுக்கு சிறப்புக்காட்சியாக திரைபிடல் செய்யவதுண்டு ,
— Seenu Ramasamy (@seenuramasamy) February 20, 2019
இம்முறை திரு,உதயநிதி செல்வி தமன்னா நடித்து வரும் 22ல் வெளிவரும் #கண்ணேகலைமானே திரைப்படத்திற்கு அவ்வாய்ப்பில்லை.
கூட்டணிகள் தீர்மானிக்கின்றன பிரிவியூ காட்சிகளையும்..