அனைவரும் தடுப்பூசி போட சீனுராமசாமி, குஷ்பு தெரிவித்த ஆலோசனைகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தடுப்பூசி போட்டால் சன்மானம் தரவேண்டும் என இயக்குனர் சீனுராமசாமி கூறியிருக்கும் நிலையில் தடுப்பூசி போட்டால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என குஷ்பு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான திரை உலக பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து வருகின்றனர்
இந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் சற்று முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தடுப்பூசி கூறியதாவது: குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எப்படி சன்மானம் தந்து வெற்றிகரமாக அன்றைக்கு நிறைவேற்றினார்களோ அதுபோல கொரோனா தடுப்பூசியிடும் பணியை தமிழக அரசு நிறைவேற்றி சகல மக்களும் தடுப்பூசியின் மீது ஆர்வம் கொள்ள செய்தல் வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் நடிகை குஷ்பு அவர்கள் தடுப்பூசி குறித்து ஒரு கருத்தை தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். ஒவ்வொருவரின் ரேஷன் கார்டும் தடுப்பூசி ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் தடுப்பூசி போட்டால் மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அனைவரும் தடுப்பூசி போட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Govt should bring out a rule of linking your vaccination record to your ration cards. Ration should be given to only those who are vaccinated. Atleast something to make those who are not getting vaccinated despite being eligible to come out and get it done. #GetVaccinated ????
— KhushbuSundar ❤️ (@khushsundar) May 18, 2021
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை எப்படி சன்மானம் தந்து வெற்றிகரமாக அன்றைக்கு நிறைவேற்றினார்களோ அது போல கொரோனா தடுப்பூசியிடும் பணியை தமிழக அரசு நிறைவேற்றி சகல மக்களும் தடுப்பூசியின் மீது ஆர்வம் கொள்ள செய்தல் வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.@Udhaystalin @mkstalin
— R.Seenu Ramasamy (@seenuramasamy) May 19, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments