'முத்தையா' படம் வேண்டாம் விஜய்சேதுபதி: பிரபல இயக்குனர் அறிவுரை

பிரபல இலங்கை முன்னாள் பந்து வீச்சாளர் முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறப்பட்டது. இந்த படத்திற்கு ஈழத்தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. எனவே இந்த படம் உருவாக இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் ஈழத் தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என அவரது நட்பு வட்டாரங்கள் கூறி வருவதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் விஜய் சேதுபதியை முதன்முதலாக ’தென்மேற்கு பருவக்காற்று’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்த இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ’முத்தையா முரளிதரன்’ படத்தில் விஜய்சேதுபதி நடிப்பது குறித்து ஒரு பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:

விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள்

விஜய்சேதுபதி நடிக்கும்
யாதும் ஊரே யாவரரும் கேளீர் திரைப்படம் அதற்கு சான்று.
ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து.
உள்ளங்கைக்கு முத்தம்.

மக்கள் செல்வா..
நீரே எங்கள்
தமிழ் சொத்து அய்யா
நமக்கெதற்கு மாத்தையா?
மாற்றய்யா?

More News

சூரி பணமோசடி விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்!

நடிகர் சூரியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய இருவரும் ரூ.2.7 கோடி ஏமாற்றியதாக கூறப்படும் புகாரில் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது

வாத்தி கம்மிங்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட 'கோமாளி' நடிகை

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய திரைப்படம் 'மாஸ்டர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து

பிகினி உடையில் மணியடித்து தத்துவ மழை பொழிந்த டாப்சி

தனுஷ் நடித்த 'ஆடுகளம்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி.

பாலாஜி முருகதாஸ்: சொந்த கதை டாஸ்க்கில் அசத்திய ஒரே போட்டியாளர் 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 4 நாட்களாக போட்டியாளர்கள் தங்களுடைய சொந்த கதையை கூறிக்கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் பலருடைய கதைகள் சுவராசியம் இல்லாமல் இருந்த நிலையில்

சோகக் கதையைக் கூட சிரித்துக்கொண்டே கூறிய ரம்யா பாண்டியன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் சிரித்த முகத்தோடு இருக்கும் ஒரே போட்டியாளர் ரம்யா பாண்டியன் தான் என்பது அவரது ஆர்மியினர்களின் கருத்தாக உள்ளது.