தமன்னா விரைவில் குணமாக பிரபல இயக்குனர் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை தமன்னா சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். வெப்தொடர் ஒன்றில் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்ட போது அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவர் பரிசோதனை செய்தபோது பாசிடிவ் ரிசல்ட் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து தமன்னா விரைவில் குணமாக வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமன்னா நடித்த ’தர்மதுரை’ மற்றும் ’கண்ணே கலைமானே’ ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் தமன்னா விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமன்னா இயல்பாகவே கடினமான சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடக் கூடிய தன்மை உடையவர் என்றும் இந்த கொரோனா பிரச்சனையில் இருந்தும் அவர் விரைவில் குணம் அடைவார் என்று நான் வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அவருடைய போன் அழைப்பிற்காக எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Really nice to see your messages @tamannaahspeaks
— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 5, 2020
Your determination and mental strength to fight this critical pandemic situation is sure to be rewarded.
Waiting for your call...
Get well soon pic.twitter.com/mv0CppeIKN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com