சிவகார்த்திகேயனின் 'சீமராஜா: சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்

  • IndiaGlitz, [Wednesday,August 29 2018]

சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். எனவே சிவகார்த்திகேயனின் மற்ற படங்கள் போலவே இந்த படமும் 'யூ' சான்றிதழ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 'சீமராஜா' திரைப்படம் 158 நிமிடங்கள் ஓடும் படமாக ஆக உள்ளது. அதாவது 2 மணி நேரம் 38 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும். ஒரு கமர்ஷியல் படத்திற்கு தேவையான கச்சிதமான ரன்னிங் டைமை இந்த படம் பெற்றுள்ளது. மேலும் சென்சார் சான்றிதழ் பெற்றதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 13 என அதிகாரபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

24ஏம் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள 'சீமராஜா திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

நடிகையின் கள்ளக்காதலனை கூலிப்படை வைத்து கொலை செய்த தந்தை

சூர்யா, ஜோதிகா நடித்த 'மாயாவி' உள்பட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்த விஷ்ணுப்ரியாவின் தந்தை, மகளின் கள்ளக்காதலால் ஆத்திரமடைந்து கூலிப்படை வைத்து கொலை செய்த

விஷாலின் அரசியல் அமைப்பின் பெயர் அறிவிப்பு

நடிகர் விஷால் இன்று நடைபெறும் 'இரும்புத்திரை' படத்தின் 100வது நாள் விழாவில் தனது ரசிகர் மன்றங்களை அரசியல் அமைப்பாக மாற்றி புதிய கொடியை அறிமுகம் செய்யவுள்ளார்

இன்று முதல் உதயமாகும் பிரபல நடிகரின் அரசியல் கட்சி?

கோலிவுட் திரையுலகில் இருந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி முதல் கமல், ரஜினி வரை பலர் அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். கடந்த அரை நூற்றாண்டாக தமிழகத்தை திரையுலகை சேர்ந்தவர்களே ஆட்சி செய்து வந்துள்ளனர்.

ரஜினி, அஜித்தை அடுத்து சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி.

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி வயது மூப்பு மற்றும் உடலநலக்குறைவு காரணமாக காலமானதை அடுத்து அவரது உறவினர்களும் திமுகவினர்களும் இன்னும் சோகத்தின் பிடியில் இருந்து மீளாமல் உள்ளனர்.