ஒலிம்பிக்கில் பங்குபெறும், தம்பி, தங்கைகள் வெற்றிவாகை சூட வேண்டும்....! சீமான் வாழ்த்து அறிக்கை....!
Send us your feedback to audioarticles@vaarta.com
டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 13 தம்பி, தங்கைகள் பங்கேற்கிறார்கள். அவர்கள் வெற்றிவாகை சூடி வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"ஜப்பான் நாட்டின் தலைநகரமான டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க, துப்பாக்கி சுடுதல் பிரிவில் இளவேனில் வாலறிவன், பாய்மரப் படகுப்போட்டி பிரிவில் நேத்ரா குமணன், வருண் தாக்கர், கணபதி, மேடை வரிப்பந்து பிரிவில் சத்யன், சரத் கமல், வாள் சண்டை பிரிவில் பவானி தேவி, தடகளப்பிரிவில் ரேவதி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் தம்பி மாரியப்பன் தங்கவேலு ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த பதிமூன்று தம்பி, தங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
தங்களது சீரிய முயற்சியாலும், அளப்பெரும் திறமையாலும், கடின உழைப்பாலும் படிப்படியாக முன்னேறி விளையாட்டுத்துறையில் சாதனைகள் பல புரிந்து இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவுக்கு உயர்ந்திருக்கும் தம்பி, தங்கைகள் அனைவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வாரிக்குவித்து, தமிழ் மண்ணுக்குப் பேரும், புகழும் சேர்க்க வேண்டுமெனும் எனது விருப்பத்தையும், வெற்றிவாகை சூடி வர எனது உளம் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றேன்" என்று கூறப்பட்டுள்ளது.
டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 தம்பி-தங்கைகள் தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்.
— சீமான் (@SeemanOfficial) July 14, 2021
தமிழ் மண்ணுக்குப் பேரும் புகழும் சேர்க்கும் வகையில் அனைவரும் வெற்றிவாகை சூடிவர உளம் நிறைந்த வாழ்த்துகள்! pic.twitter.com/BvRhnM5ZNM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments