எது கண்ட இடம்? கமல்ஹாசனுக்கு சீமான் கேள்வி

  • IndiaGlitz, [Thursday,January 25 2018]

தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் தியானம் செய்தது குறித்து கமல் இன்று கூறியபோது, 'இதற்குத்தான் கண்ட இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க வேண்டாம் என்று கூறினேன். தியானம் செய்வது விஜயேந்திரரின் கடமை என்றால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினால் எழுந்து நிற்பது என் கடமை' என்று கமல் கூறினார்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: கண்ட இடத்திலெல்லாம் தமிழ்தாய் வாழ்த்து பாடவேண்டாம் என கமல் கூறியிருந்தார், ஆனால் எதனை கண்ட இடமென குறிப்பிடுகிறார்? பட்டியல் ஏதும் இருக்கிறதா?. ஆளுநர் உள்ள அவையில் தமிழ்தாய் வாழ்த்தை பாடுவதில் என்ன பிழை?

மேலும் அதே கண்ட இடத்தில்தான் தேசிய கீதமும் பாடப்பட்டது. கண்ட இடத்தில் தியானம் கூடாது என விஜயேந்திரருக்கு அறிவுறுத்த கமல் மறுப்பது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுவரை ரஜினியை மட்டுமே விமர்சனம் செய்து வந்த சீமான், முதன்முதலாக கமல்ஹாசனையும் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு கமல் பதிலளிப்பாரா? அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்