ரஜினி அரசியலுக்கு வரட்டும்! ஆனால் முதல்வர் ஆகக்கூடாது: சீமான்

  • IndiaGlitz, [Friday,May 19 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை சந்தித்தபோது இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும், ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் ஆகியோர்கள் குறித்தும் குறிப்பிட்டார். இந்த நிலையில் தன்னை பற்றி புகழ்ந்து பேசிய போதிலும் ரஜினி தமிழகத்தின் முதல்வர் ஆகக்கூடாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான். அவர் கூறியவற்றின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்:

ரஜினி கூறிய'நிர்வாக அமைப்பு தவறாக இருக்கிறது' என்ற கருத்தை ஏற்கிறேன். இதை நான் நீண்டகாலமாக பேசி வருகிறேன். அடிப்படை மாற்றத்தோடு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும். இந்தக் கட்டடத்துக்கு வெள்ளை அடிப்பதைவிட, புதிய கட்டடம் எழுப்ப வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த அமைப்பில் அனைத்துமே தவறாக இருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் ரஜினிகாந்த் என்ன செய்வாரோ, அதைவிட ஆயிரம் மடங்கு நாங்கள் செய்வோம். நான் தமிழனாகவே கரைந்துவிட்டேன் என்கிறார். நமது மக்கள் எம்.ஜி.ஆரை மலையாளியாகப் பார்க்கவில்லை. அது நம் மக்களின் பெருந்தன்மை. ஆனால், இந்த மண்ணை என் அளவுக்கு உங்களால் நேசிக்க முடியாது. எனக்கு என்னுடைய வரலாறும் மொழியும் பண்பாடும் தெரியும். என் மண்ணின் பழம்பெரும் வாழ்க்கை முறைகளை நான் அறிந்து வைத்திருக்கிறேன். என்னுடைய தாய், தந்தைக்கு என்ன தேவை என்பதை அறிந்து என்னால் செய்து கொடுக்க முடியும். அதை உங்களால் செய்ய முடியாது என்பதுதான் என்னுடைய வாதம்.

ரஜினி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நடிக்கட்டும். எவ்வளவு ஆயிரம் கோடிகளையும் சம்பாதிக்கட்டும். இப்போதும் ரஜினிகாந்தை மதிக்கிறோம். அவர் படத்தின் முதல் காட்சி பார்க்கும் ரசிகராகவும் இருப்போம். அதுவேறு. எங்கள் அய்யா சகாயம் ஐ.ஏ.எஸ், மக்கள் பாதை என்ற அமைப்பின் மூலம் சமூக சேவை செய்து வருகிறார். நீங்களும் அப்படிச் செய்யுங்கள். இளைஞர்களிடம் பேசுங்கள். சேவையின் மனப்பான்மையை எடுத்துக் கூறுங்கள். அதைவிடுத்து, எங்களுக்கு முதல்வராக இருந்து ஆள வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. எங்கள் நாட்டை நாங்கள்தான் ஆள வேண்டும்.

ரஜினியைப் பொறுத்தவரையில், அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்த மண்ணில் அவர் கரைந்து வாழ்கின்றவர் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், அவர் இந்த மண்ணை ஆள வேண்டும் என்று நினைப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஜல்லிக்கட்டு, கச்சத்தீவு, காவிரி விவகாரம் போன்றவற்றில் அவருடைய நிலைப்பாடு என்ன? அரசியலுக்கு அவர் வர வேண்டிய தேவை இல்லை' இவ்வாறு சீமான் சீற்றத்துடன் கூறியுள்ளார்.

More News

சிம்பு குரலில் விஷ்ணு விஷாலின் ஆரம்பமும், முடிவும்!

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணுவிஷால், 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' வெற்றிக்கு பின்னர் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார். தற்போது அவர் 'கதாநாயகன்,', பொன் ஒன்று கண்டேன்', 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்', மின்மினி போன்ற படங்களில் நடித்து வருகிறார்...

புதிய சாதனைக்காக காத்திருக்கும் ஆர்.கே.சுரேஷ்-வரலட்சுமி படம்

பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தில் வில்லனாக நடித்திருந்த ஆர்.கே.சுரேஷ், மற்றும் நாயகியாக நடித்திருந்த வரலட்சுமி ஆகியோர் இணைந்து நாயகன் - நாயகியாக நடிக்கவுள்ள திரைப்படம் 'வர்கம்'. 'பாகுபலி'

ரஜினிக்கு முதல்வராகும் தகுதி இல்லை: சுப்பிரமணியம் சுவாமி

கடந்த ஒருவாரமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற பேச்சே அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் டிரெண்ட் ஆகி வருகிறது

சச்சின் திரைப்படத்தை உற்சாக்ப்படுத்தும் இந்திய மாநிலங்கள். தமிழகமும் சேருமா?

கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின் எ பில்லியன் டிரீம்ஸ்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி தமிழ், உள்பட பல மொழிகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெளியாகவுள்ளது...

பாடல் வெளியீட்டுக்கு பதில் ஆக்சன் வெளியீட்டு விழா: மிஷ்கினின் வித்தியாசமான முயற்சி

விஷால் நடிப்பில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் தெரிவிக்கையில் ஹாலிவுட்டில் வெளிவரும் ஷெர்லாக்