இதற்கெல்லாம் விஜய் பயப்படக்கூடாது: பிகில் விவகாரம் குறித்து சீமான்

  • IndiaGlitz, [Thursday,October 24 2019]

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் இன்று இரவு வெளிநாடுகளிலும் நாளை காலை இந்தியாவிலும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கான சிறப்புக்காட்சி அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி சிறப்புக்காட்சிக்கு அனுமதி கிடையாது என்றும் அதற்கான பணத்தை திருப்பி கொடுக்க திரையரங்கு நிர்வாகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நேற்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிகில் படத்தின் சிறப்புக்காட்சி விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: 'நடிகர் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக் கொண்டு தான் தமிழக அரசு பழிவாங்குகிறது. விஜய் பேசிய கருத்துக்கு எதிர் கருத்துக்களை பலரும் தெரிவித்து விட்டார்கள். அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது. இதனால் இன்றைய தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகி விடும்.

செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது இதனால் அதிகாரத்தினர், அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது’ என்று கூறியுள்ளார்.