ரஜினியின் அரசியல் முடிவுக்கு திடீர் ஆதரவு அளித்த சீமான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி தான் அரசியலில் குதிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து அவரது அரசியல் வருகைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களில் ஒருவர் நடிகரும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 ஆண்டுகளாக ரஜினிகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்த சீமான் திடீரென தற்போது ரஜினி மீதான முரண்பாடு நீங்கியது என்று குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி ஒரு தமிழர் அல்ல என்றும் அவர் முதல்வராக கூடாது என்பது தான் தன்னுடைய எதிர்ப்புக்கு காரணம் என்றும் ஆனால் அவர் வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என கூறியதில் இருந்தே அவர் மீதான முரண்பாடு நீங்கி விட்டது என்றும் சீமான் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

ஏற்கனவே பல மேடைகளில் மற்ற மாநிலத்திலவர்கள் இங்கு வாழ்வதற்கும், தொழில் செய்வதற்கும் தடையில்லை என்றும் ஆனால் ஆட்சியை தமிழர் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் சீமான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியுடனான முரண்பாடு நீங்கிவிட்டதாக சீமான் கூறியதில் இருந்து இனி அவர் ரஜினியை விமர்சனம் செய்ய மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் தொடங்கும் நாளில் போட்டியாளர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு: பரபரப்பு தகவல்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்தோம்

தனுசுக்கு ஒரு வருடம், விஜய்சேதுபதிக்கு இரண்டாவது வருடம்: இணையத்தில் வைரல் 

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகி விட்டது என்பதும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த '96' திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வருடம் ஆகி விட்டது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆர்ஜே அர்ச்சனா இல்லை: உறுதி செய்த புகைப்படம்

இன்று தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலசந்தர் பட நடிகர்! பரபரப்பு தகவல்

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று தொடங்கவுள்ள நிலையில் சற்று முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் புரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது 

புதிய வாழ்க்கை புதிய யதார்த்தம் புதிய துவக்கம்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் புரமோ!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் விஜய் டிவியில் தொடங்க உள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் அறிமுகம் செய்யப்படுவார்கள்