தயவுசெய்து இந்த படத்தை பாருங்கள்: விஜய்சேதுபதி படம் குறித்து சீமான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தயவு செய்து இந்த படத்தை அனைவரும் பாருங்கள் என விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
’கடைசி விவசாயி’ என்ற படம் திரையில் சொல்ல வேண்டும் என்றால் துணிந்து முயற்சி செய்ததற்கு நான் மிகப்பெரிய பாராட்டுக்களைதெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு காட்சியையும் உணர்ந்து ரசிக்கும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
நிறைய செய்திகளை ஒவ்வொரு காட்சியிலும் இந்த படம் தெரிவித்துள்ளது. குறிப்பாக விவசாயியாக நடித்திருக்கும் பெரியவரின் நடிப்பு மிகவும் இயல்பாக இருப்பதை பார்த்து நான் அசந்து போய் விட்டேன். தயவுசெய்து ஒவ்வொருவரும் இந்த படத்தை திரையில் சென்று பார்த்து இந்த படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கடைசி விவசாயி’ திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி வெள்ளி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Politician and filmmaker @SeemanOfficial shares his excitement after watching #KadaisiVivasayi.#KadaisiVivasayiFromFeb11@dirmmanikandan @vsp_productions #TribalArtsProduction #ArtistsCoupe #RichardHarvey @Music_Santhosh @7CsPvtPte @iYogiBabu @Aravindh_dir @r_kumarshivaji pic.twitter.com/OaHuBjBPR4
— VSP_Productions (@vsp_productions) February 9, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com