இதுக்கு முன்னாடி விஜய் படத்துல சிகரெட் காட்சி இல்லையா? சீமான் ஆவேசம்..!

  • IndiaGlitz, [Sunday,July 09 2023]

தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’நா ரெடி’ என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் அவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டி காவல் துறையில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ’இதற்கு முன்னர் விஜய் படத்தில் சிகரெட் காட்சியே வந்ததில்லையா? மது குடிப்பது போன்ற அவர் நடித்ததே இல்லையா? வன்முறை காட்சிகள் அவர் படத்தில் வந்ததே இல்லையா?

அப்பொழுதெல்லாம் ஏன் அவர்கள் புகார் கொடுக்கவில்லை? விஜய் அரசியலுக்கு வந்து விடுவாரோ என்ற பயத்தினால் தான் தற்போது புகார் கொடுக்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.

ஒருவேளை விஜய் அந்த பாடலை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டால் உடனே குடிப்பவர்கள் எல்லாம் திருந்தி விடுவார்களா? எத்தனை படத்தில் எத்தனை நடிகர்கள் சிகரெட் குடிப்பது போன்ற காட்சி உள்ளது, அப்போதெல்லாம் இவர்கள் ஏன் பேசவில்லை? டாஸ்மாக்கை மூடுவதற்கு வக்கில்லாதவர்கள் இதைப் பற்றி எல்லாம் பேசவே கூடாது’ என்று தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

சென்னையில் தல தோனி கலந்து கொள்ளும் சினிமா நிகழ்ச்சி.. மனைவி சாக்சியுடன் வருகிறார்..!

தல தோனி தனது மனைவி சாக்சியுடன் நாளை சென்னை வர இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

கணவர் ரவீந்தர் பிறந்தநாளுக்கு 6 அடி உயரத்தில் பரிசு கொடுத்த மகாலட்சுமி.. வைரல் வீடியோ..!

பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை மகாலட்சுமி கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.

திருமண போட்டோஷூட் சர்ச்சை.. விளக்கம் அளித்த புஷ்பா புருஷன் நடிகை..!

 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்த நடிகை ரேஷ்மாவின் திருமண போட்டோ சமீபத்தில் வைரலான நிலையில் இது குறித்து தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்

ரிஷப் ஷெட்டியின் பிறந்த நாளில் மனைவி பிரகதி ஷெட்டியின் முக்கிய அறிவிப்பு.. குவியும் வாழ்த்துக்கள்..!

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி சமீபத்தில் தனது பிறந்தநாளை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடிய நிலையில் இந்த பிறந்தநாள் விழாவில் அவரது மனைவி பிரகதி ஷெட்டி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் தெலுங்கு படத்தில் வில்லனாகும் விஜய் சேதுபதி? இந்த முறை ஹீரோ இந்த மாஸ் நடிகரா?

தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' விஜய் நடித்த 'மாஸ்டர்' மற்றும் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி ஏற்கனவே தெலுங்கில் 'உப்பெனா' என்ற படத்தில்