சூர்யா அளவுக்காவது விஜய் வரணும்: சீமான் கருத்தால் ரசிகர்கள் அதிருப்தி!

  • IndiaGlitz, [Friday,December 25 2020]

சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பேட்டியளித்த சீமான் ’கமல் ரஜினியை அடிக்கிற அடியில் விஜய் உள்பட இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வரக்கூடாது’ என்று பேசினார். சீமானின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தது குறிப்பாக விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிராக தங்களது கண்டனத்தை போஸ்டர்கள் மூலம் தெரிவித்தனர்

விஜய் ரசிகர்களின் இந்த கண்டன போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய் ரசிகர்களின் கோபம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அந்த சீமான், ‘விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது? என்று கூறினார்

மேலும் ’குறைந்தது சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும் என்றும், மக்களுக்காக போராடி தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும்’ என்றும் அவர் கூறினார். சீமானின் இந்தக் கருத்தும் தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது