தாமதமாக வெளிவந்தாலும் சரியான விளக்கம்: 'ஜெய்பீம்' விவகாரம் குறித்து சீமான்!
- IndiaGlitz, [Monday,November 22 2021]
சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மட்டும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் இது குறித்த கருத்து மோதல்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘ஜெய்பீம்’ விவகாரம் குறித்து சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ‘குறிப்பிட்ட சமூக மக்களின் வலியை வெளிப்படுத்துவதற்காக இன்னொரு சமூக மக்களுக்கு வலியை ஏற்படுத்தக் கூடாது என்றும், சூர்யா அதை தவிர்த்திருக்கலாம்’ என்று தெரிவித்திருந்தார்
இதனை அடுத்து ‘ஜெய்பீம்’ படத்தின் இயக்குனர் ஞானவேல் நீண்ட விளக்கத்தை அளித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கைக்குப் பின் இந்த விவகாரம் குறித்து சீமான் கூறியதாவது:
ஜெய் பீம்' படம் குறித்தான தம்பி ஞானவேல் அவர்களின் கடிதம் கண்டேன். தாமதமாக வெளிவந்தாலும் மிகச்சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து, இச்சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சமூகப் பதற்றத்தையும், சச்சரவையும் தணிக்கும்விதமாக சமூகப்பொறுப்புணர்வோடும், மிகுந்த முதிர்ச்சியோடும் அணுகிய இம்முறை வரவேற்கத்தக்கது.
ஆகவே, இச்சிக்கலை இத்தோடு கைவிட்டு, இனியும் இப்படத்தின் சிக்கலை ஒட்டுமொத்த சமூகத்தின் சிக்கலாக நீடிக்கச்செய்யாது, சமூக அவலங்களுக்காகக் குரலெழுப்பி, மக்களின் துயர்போக்கக் போராடவும், ஆக்கப்பூர்வப்பணிகளில் கவனம் செலுத்தவும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
'ஜெய் பீம்' படம் குறித்தான தம்பி ஞானவேல் அவர்களின் கடிதம் கண்டேன். தாமதமாக வெளிவந்தாலும் மிகச்சரியாகத் தனது தரப்பு விளக்கத்தை அளித்து, இச்சிக்கலுக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
— சீமான் (@SeemanOfficial) November 21, 2021
(1/3)
ஆகவே, இச்சிக்கலை இத்தோடு கைவிட்டு, இனியும் இப்படத்தின் சிக்கலை ஒட்டுமொத்தச்சமூகத்தின் சிக்கலாக நீடிக்கச்செய்யாது, சமூக அவலங்களுக்காகக் குரலெழுப்பி, மக்களின் துயர்போக்கக் போராடவும், ஆக்கப்பூர்வப்பணிகளில் கவனம் செலுத்தவும் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
— சீமான் (@SeemanOfficial) November 21, 2021
(3/3)