ரஜினியை சுதந்திரமா வாழ விடுங்க.. யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து சீமான்..!

  • IndiaGlitz, [Monday,August 28 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டு வந்த நிலையில் இது குறித்து சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

அப்பர் சுவாமிகள், ஞானசம்பந்தர் என்ற சிறுவனின் காலில் விழுந்து வணங்கி உள்ளார். ரஜினிக்கு என்ன விருப்பமோ அதை அவர் செய்கிறார். என்னையே எடுத்துக் கொண்டால் கல்வியாளர் மற்றும் அறிவாளியை பார்த்தால் வணங்க வேண்டும் என்று தோன்றும். இதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது

இதனால் எல்லாம் ஒரு மனிதன் சமூக குற்றவாளி ஆகிவிடுவானா? ரஜினி காலில் விழுந்ததால் தான் வெங்காயம் விலை ஏறிவிட்டதா? அவருக்கு விருப்பமானதை செய்ய விடுங்கள், அவரை சுதந்திரமாக வாழ விடுங்கள், அவருக்கு பிடித்ததை செய்ய விடுங்கள், அவருக்கு தியானம் செய்வது, யோகிகளை வணங்குவது பிடித்திருக்கிறது, அதில் தவறு ஒன்றும் இல்லை.

எனக்கு புத்தகங்கள் படிப்பதிலும், பாட்டு கேட்பதிலும், இசை ரசிப்பதிலும் விருப்பம் உண்டு, அதேபோல் அவருக்கு எதில் விருப்பமோ அதை அவர் செய்துவிட்டு போகட்டும். அவரை தொல்லை பண்ண வேண்டாம்

எப்படி பார்த்தாலும் தமிழ்நாட்டின் பெருமை ரஜினிகாந்த். அவர் நினைத்திருந்தால் வேற மொழியில் நடித்து பெரிய ஆளாகி இருக்கலாம். 73 வயதில் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி ஒரு மிகப்பெரிய வியாபாரத்தை கொடுக்கும் நடிகன் தமிழ்நாட்டில் இருப்பது ஒரு பெருமை தான். அதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும்.

யோகி ஆதித்யநாத் மற்றும் ரஜினிகாந்த் இடையே நீண்ட காலத்திற்கு நட்பு இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. யோகி முதலமைச்சராக ஆகும் முன்னரே ரஜினியுடன் நட்பு வைத்திருக்கலாம். ஏனெனில் ரஜினியிடம் நட்பு வைத்திருக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார். சீமானின் இந்த கருத்துக்கு நடிகர்-இயக்குனர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.