உலகத்தில் யாரும் செய்யாததையா அவர் செஞ்சிட்டார்: கே.டி.ராகவன் விவகாரம் குறித்து சீமான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாஜக பொதுச் செயலாளராக இருந்த கேடி ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலானது என்பதும் இந்த வீடியோவை வெளியிட்ட யூடியூபர் மதன் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து விசாரணை செய்ய பாரதிய ஜனதா குழு ஒன்று அமைத்து உள்ளது என்பதும் அந்தக் குழு தற்போது விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கேடி ராகவன் வீடியோ விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் சீமான், ‘தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை, அறையில் கேமராவை வைத்து பதிவு செய்வதே சமூக குற்றம் என்றும், உலகத்தில் யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார் என்றும், அதை காட்சிப்படுத்துவது தான் உண்மையான சமூக குற்றம் என்றும் முதலில் அந்த வீடியோவை வெளியிட்டவரை தான் கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஒருவருக்கு தெரியாமல் அவருடைய படுக்கை அறை மற்றும் கழிவறையில் கேமரா மறைவாக வைத்து படம் எடுப்பது என்பது சமூகக் குற்றம் என்றும், தனிப்பட்ட முறையில் ஒரு அறையில் அவர் செய்ததை வீடியோ எடுத்து வெளியிடுவது என்பதை பார்க்கும்போது கேடுகெட்ட சமூகமாக நமது கலாச்சார மாறிவிட்டதோ என்ற அச்சம் வருகிறது என்றும் சீமான் தெரிவித்தார். யார் யாருடன் பேசுகிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதை ஒட்டு கேட்டு பதிவு செய்து வெளியிடுவதன் மூலம் என்ன சாதிக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
யாரும் செய்யாததையா அவர் செய்துவிட்டார்- KTR-க்கு ஆதரவாக சீமான் பரபரப்பு பேட்டி!#Seeman pic.twitter.com/VIRNmsrOtn
— Manojprabhu Selladurai (@manojprabhu2006) August 30, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments