close
Choose your channels

விஷால் தமிழகத்தை ஆள நினைக்க கூடாது: சீமான்

Thursday, August 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான், விஷால் கட்சி ஆரம்பித்ததில் தவறில்லை என்றும் ஆனால் தமிழகத்தை ஆள அவர் நினைக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.

நடிகர் விஷால் நேற்று தனது ரசிகர் மன்றத்தை 'மக்கள் நல இயக்கம்' என்ற அரசியல் இயக்கமாக மாற்றினார். வரும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அவரது கட்சி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் விஷால் அரசியல் கட்சி ஆரம்பித்தது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சீமான், 'நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் ஆரம்பித்துள்ளது தவறில்லை, ஆனால் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழகத்தை ஆள நினைக்கக் கூடாது' என்று கூறியுள்ளார்.

தமிழகத்தை தமிழர் மட்டுமே ஆள வேண்டும் என்று கூறி வரும் சீமான், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதாக அறிவித்தபோதும் இதே கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment