விஜய் சொன்னதை செய்ய தவறியதால் தவறு நடந்து கொண்டிருக்கின்றது: சீமான்

  • IndiaGlitz, [Sunday,September 22 2019]

நடிகர் விஜய் சமீபத்தில் தனது ‘பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ விழாவில் அதிகபட்சமாக ஒரு 15 நிமிடங்கள் பேசியிருப்பார். ஆனால் அவர் பேசியதை வைத்து கடந்த மூன்று நாட்களாக ஊடகங்கள் வளைத்து வளைத்து செய்தி வெளியிட்டு வருகின்றன. அரசியல் தலைவர்களும் அவர் பேசியதற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். தொலைக்காட்சி மீடியாக்கள் ஒரு படி மேலே போய் விஜய் இரண்டு நிமிடங்கள் பேசியதை இரண்டு நாட்களாக விவாதம் செய்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ‘சரியான நபரை சரியான வேலைக்கு தேர்வு செய்தால் பிரச்சனை இருக்காது’ என்று விஜய் பேசியதை ஏற்கனவே ஒருசில அரசியல் தலைவர்கள் கருத்து கூறி முடிந்த நிலையில் தற்போது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவை என்பதையே நடிகர் விஜய் குறிப்பிட்டுள்ளார் என்றும், சரியான தலைவர்களை தேர்வு செய்யத் தவறியதால் தவறு நடந்து கொண்டு இருக்கிறது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

More News

அசுரனுக்கு ஆஸ்கார் மிஸ் ஆகாது: கலைப்புலி எஸ்.தாணு

தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய 'அசுரன்' திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில் இந்த படம் ஆஸ்காரை மிஸ் செய்யாது என இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

அஜித்தை எடுத்து ஜெயம் ரவி பக்கம் திரும்பிய போனிகபூர்

அமிதாபச்சன் நடித்த 'பிங்க் என்ற சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் படமான அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தை தயாரித்த போனிகபூர், இந்த படத்தின் வெற்றியால்

விஜய்க்கு முதல்வர் ஆசை வந்தால் அது தவறில்லை: பழ கருப்பையா

விஜய் உள்பட நடிகர்களுக்கு முதல்வர் ஆசை வந்தால் அது தவறில்லை என்று 'சர்கார்' படத்தில் நடித்தவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான பழ கருப்பையா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விஜய் என்ன சொன்னாலும் அவங்களுக்கு பிடிக்காது: உதயநிதி ஸ்டாலின் 

பேனர் கலாச்சாரம் குறித்தும், சுபஸ்ரீ விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நடிகர் விஜய் சமீபத்தில் நடந்த 'பிகில்' படத்தின் ஆடியோ விழாவில் பேசியது

இணையத்தில் வைரலான மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு பாட வாய்ப்பு அளிக்கும் டி.இமான்

இணையதளங்களில் ஒரு சில மோசமான விஷயங்கள் இருந்தாலும் கோடிக்கணக்கான நல்ல விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. குறிப்பாக ஒருவரது திறமையை ஒரே நாளில் உலகமே அறியும் வகையில்