ஆம் 2021ல் அதிசயம் நடந்தே தீரும்: சீமான்

  • IndiaGlitz, [Thursday,November 21 2019]

கோல்டன் ஐகான் விருதை பெற்று இன்று சென்னை திரும்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் பேட்டியளித்தபோது, ‘2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழக மக்கள் மிகப்பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள்’ என்று கூறினார். இந்த ஒரு பேட்டி ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், சமூக வலைத்தள பயனாளிகளுக்கும் ஒரு வாரம் தீனிபோடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அற்புதம்-அதிசயம் குறித்து நடிகரும், இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறியபோது, ‘அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் என்னும் வெற்றுப்பிம்பம் இனமான தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021ல் நடக்கும், நடந்தே தீரும் என்று கூறினார்.

மேலும் தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும் என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியலை ரஜினிகாந்த் செய்து வருவதாகவும் சீமான் குற்றஞ்சாட்டினார்.