விண்வெளி செயற்கைக்கோள் தேவையா? முதலில் குழந்தையை மீட்டெடுங்கள்: சீமான்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து விண்வெளிக்கு செயற்கைக் கோளை அனுப்புவதைவிட ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்பதற்கு தேவையான கருவிகள் கண்டு பிடிப்பது முக்கியம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அடுத்து அந்தக் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு படையினர் ஈடுபட்டிருக்கும் நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கூறியதாவது: விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி நம் நாடு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிற செய்திகேட்டு பெருமைப்படுகிற அதே காலக்கட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து அதை மீட்கப் போராடி வருவது வெட்கித் தலைகுனிய வைக்கிறது
மேலும், ஆழ்துளைக்கிணற்றில் சிக்குண்டு இருக்கும் குழந்தை சுர்ஜித்தை பாதுகாப்பாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கோருகிறேன்’ என்று சீமான் கூறியுள்ளார்.
ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த குழந்தையை மீட்க கருவி கண்டுபிடிக்க வேண்டியது அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com