அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்த சீமான்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நூற்றுக்கணக்கான நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் சென்னை அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று ஐபிஎல் போட்டி சென்னையில் இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில் இரவு 7 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே சீமான் அறிவித்திருந்தார். இந்த நிலையில் திட்டமிட்டபடி சற்றுமுன் சீமான் மற்றும் நூற்றுக்கணக்கான நாம் தமிழர் தொண்டர்கள் சேப்பாக்கத்தை நோக்கி சென்றனர்

ஆனால் அவர்கள் அண்ணா சாலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கின்றது. நாம்தமிழர் கட்சியின் தொண்டர்களுக்கும் காவல்துறையினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அரசியல் கட்சிகளின் போராட்டம் காரணமாக ஹோட்டல்களில் தங்கியிருக்கும் வீரர்களை மைதானத்திற்குள் அழைத்து செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம்: திடீரென களத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள்

காவிரி, ஸ்டெர்லைட் போராட்டங்கள் தமிழகத்தில் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த போராட்டங்களை திசைதிருப்பும்

ஐபிஎல் போட்டி எதிரொலி: கடற்கரை சாலை- வாலாஜா சாலை போக்குவரத்து திடீர் நிறுத்தம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி இன்னும் ஒருசில மணி நேரங்களில் ஆரம்பமாகவுள்ளதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

சென்னையில் சிஎஸ்கே போட்டி: கட்டுப்பாட்டிற்கு திடீர் தளர்வு

சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் போட்டிக்கு வரும் பார்வையாளர்களுக்கு நேற்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

காவிரிக்காக ஒன்று சேர்ந்த அஜித்-விஜய் ரசிகர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக போராட்டம் செய்து வருகின்றனர்.

விஜய் எப்பொழுது அரசியலில் ஈடுபடுவார் ? எஸ்.ஏ.சி

தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் சமூக  வலைத்தளங்கள் மூலம் தங்கள் விருப்பத்தை தெரிவித்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு தந்தையாக விஜய் அரசியலுக்கு வரவேண்டும்