சீமானை போல் பொய் சொல்பவரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை: வைகோ

  • IndiaGlitz, [Friday,April 20 2018]

கடந்த சில நாட்களாகவே சீமான் குறித்து வைகோ திடுக்கிடும் புகார்களை கூறி வருகிறார். பிரபாகரனை வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே சீமான் பார்த்ததாகவும், பிரபாகரனுடன் அவர் போட்டோ எடுக்கவில்லை என்றும், பிரபாகனுடன் சீமான் இருக்கும் போட்டோ போட்டோஷாப் என்'றும் சமீபத்தில்  வைகோ கூறியது அனைவரையும் அதிர வைத்தது. ஒரு சின்ன விசயத்திற்கு கூட மணிக்கணக்கில் விளக்கம் அளிக்கும் சீமான், இன்றுவரை வைகோவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் சீமான் மீது வைகோ கடுமையான புகார்களை கூறியுள்ளார். பொய் சொல்வதில் சீமானைப்போல்  பொய் சொல்பவரை என் வாழ்நாளில் கண்டதே இல்லை என்று அவர் கூறியுள்ளார். பொய் சொல்வதில் கோயபல்ஸ் தான் உலகிலேயே சிறந்தவர் என்றும் ஆனால் அவரையே சீமான் மிஞ்சிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஒருசில இளைஞர்கள் சீமானின் ஆவேசமான பேச்சை நம்புகிறார்கள் என்றும் அவர்களுக்காக தான் வருத்தப்படுவதாக கூறிய வைகோ, 'சீமான், ஈழத்தை சொல்லி, பிரபாகரன் பெயரை சொல்லி பணம் வசூல் செய்து கொண்டிருக்கும் சர்வதேச மோசடியை என்னால் காண சகிக்கவில்லை' என்று கூறியுள்ளார்.

More News

எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீச்சு: பத்திரிகையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர்.

புதிய வீடு புதிய சவால்கள்

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்த போராட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை சென்னையிலிருந்து மாற்றி,

கமலாலய வாசலில் களமாடும் பத்திரிக்கையாளர்கள்

நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், நேற்று தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து

எஸ்.வி.சேகரும், எச்.ராஜாவும் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயகுமார் விளாசல்

சமீபத்தில் தமிழக கவர்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

படிக்காமல் பதிவு செய்துவிட்டேன்: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர்

நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசும் விதத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.