நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற சீமானிடம் கேரள போலீசார் விசாரணை
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் அம்மாநில மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளான நிலையில் இந்தியா முழுவதிலும் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக நிதியும் நிவாரண பொருட்களும் குவிநது வருகிறது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் தன்னுடைய கட்சியினர்களுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரண பொருட்களை எடுத்து சென்றார். ஆனால் அவர் எடுத்துச் சென்ற நிவாரண பொருட்களில் சந்தேகம் இருப்பதாக கூறி சீமான் உள்ளிட்ட அவருடைய கட்சியினர்களை கோட்டயம் கிழக்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை செய்தனர்.
சீமான் கொண்டு சென்ற நிவாரண பொருட்களில் சந்தேகம் இருப்பதால் பரிசோதிக்க வேண்டும் என்று கேரள காவல்துறை சந்தேகத்தின் பேரில் வலியுறுத்தியதாகவும் அதன் பின்னர் சுமார் நான்கு மணி நேரம் நிவாரண பொருட்கள் சோதனை செய்யப்பட்ட பின்னர் சீமான் உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டபட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சீமான் மீது பல்வேறு வழக்குகள் தமிழக நீதிமன்றங்களில் இருப்பதால் அவர் கொண்டு சென்ற பொருட்கள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரள போலீசார்களின் இந்த நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout