சீமான் கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி

  • IndiaGlitz, [Tuesday,March 01 2016]

கோலிவுட் திரையுலகில் புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சீமான் கடந்த 2011ஆம் ஆண்டு 'நாம் தமிழர்' என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். விரைவில் வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அவருடைய கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது.

மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையையே இன்னும் முடிக்காத நிலையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்த சீமான், அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது மட்டுமின்று அனைத்து வேட்பாளர்களின் அறிமுக விழாவையும் சமீபத்தில் நடத்தினார். இவர்களில் ஒருவர் ஸ்ரீதேவி என்ற பெயரையுடைய திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீமானுக்கு கிடைத்த முதல் வெற்றியாக அவருடைய கட்சிக்கு பொதுச்சின்னம் ஒன்றை தேர்தல் கமிஷன் அளித்துள்ளது. 'நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள சின்னம் மெழுகுவர்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது. சீமானின் அரசியல் இயக்கம் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே தனிச்சின்னம் கிடைத்ததையே தங்களுக்கு கிடைத்துள்ள வெற்றியின் முதல்படி என்றும் இதேபோல் தேர்தலிலும் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு சேவை செய்வோம் என்றும் 'நாம் தமிழர்' கட்சியின் தெரிவித்து வருகின்றனர். சீமானின் வெற்றிக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.