'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு சீமான் பாராட்டு

  • IndiaGlitz, [Saturday,October 21 2017]

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் மேடைகளிலும் இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், டிவி போன்ற பொருட்களை கொடுப்பதற்கு பதிலாக கல்வி மற்றும் மருத்துவ வசதியை இலவசமாக அரசு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இதே கருத்தை தளபதி விஜய்யின் 'மெர்சல்' படம் கூறியுள்ள நிலையில் தற்போது 'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தரமான இலவச மருத்துவத்தின் தேவையை வலியுறுத்தி தடைகள் பல தாண்டி வெளிவந்திருக்கும் மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற அன்புக்குரிய தம்பி விஜய், இயக்குனர் தம்பி அட்லீ மற்றும் இப்படத்தை உருவாக்க உழைத்திட்ட அனைத்து படக்குழுவினர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்' என்று அவர் தனது சமூக வலைத்தள பகக்த்தில் தெரிவித்துள்ளார்.