ராஜராஜ சோழன் சர்ச்சை: ரஞ்சித்துக்கு சீமான் கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழன் குறித்து சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் ரஞ்சித் கடுமையான விமர்சனம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு அந்த வழக்கில் தான் கைது செய்யமால் இருக்க முன் ஜாமீனும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ரஞ்சித்தின் கருத்தை திருமாவளவன், கே.எஸ்.அழகிரி போன்ற ஒருசில அரசியல் தலைவர்கள் ஆதரித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் ஒரு பேரரசனை விமர்சனம் செய்தது குறித்து ரஞ்சித்தை கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜராஜ சோழன் குறித்து விமர்சனம் தெரிவித்த ரஞ்சித்தை கண்டித்துள்ளார். ராஜ ராஜ சோழனை தமிழ் இன அடையாளமாக தாங்கள் பார்ப்பதாகவும், பல நாடுகளை வென்ற பேரரசன் சொந்த மக்களின் நிலத்தை பறித்திருபாரா? என்றும் ரஞ்சித்துக்கு பதிலடி கூறியுள்ளார். மேலும் ராஜராஜ சோழன் குறித்து கருத்து கூறும் ரஞ்சித், அணுக்கழிவுகளை பற்றி பேசாதது ஏன் என்றும் அவ கேள்வி எழுப்பியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout