அத்திவரதர் போல் ரஜினியை வீழ்த்திய விஜய்: சீமான் ஆவேச பேச்சு

  • IndiaGlitz, [Tuesday,August 27 2019]

காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் காட்சியளித்த அத்திவரதர், திருப்பதி ஏழுமலையானை வீழ்த்தியது போல், தம்பி விஜய், ரஜினிகாந்தை வீழ்த்தியுள்ளது நமக்கு பெருமை தான் என்று காஞ்சிபுரம் அருகே சுங்குவார்சத்திரம் என்ற இடத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேசியுள்ளார். மேலும் அவர் இது குறித்து கூறியதாவது:

40 நாட்களுக்கு மேலாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் அத்திவரதர் குறித்த செய்திகள் தான் வெளிவந்தது. இது அனைவருக்கும் பெருமையாக இருந்தது. ஆனால் கடைசியில் ரஜினியும் நயன்தாராவும் அத்திவரதருக்கு குட்பை சொல்லி அனுப்பி அனுப்பி வைத்தனர். அத்திவரதர் எந்த அளவுக்கு பெருமைக்குரியதாக இருந்தாரோ இவர்கள் இருவரும் சென்று வந்த பின்னர் அந்த அளவுக்குப் சிறுமைக்குரிய விஷயமாக மாறிவிட்டது. ஆனால் ஒரே ஒரு விஷயம், திருப்பதி வெங்கடாஜலபதியை 48 நாட்களில் அத்திவரதர் வீழ்த்தியது போல் ரஜினியையும் தம்பி விஜய் வீழ்த்தியது நமக்கு பெருமை தான் என்று கூறினார்

மேலும் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வரப்போவதாக பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். அவர் அரசியலுக்கு வருவது குறித்து நான் தம்பி விஜய் வசனத்தை கூறுகிறேன். ஐ அம் வெயிட்டிங் என்று கூறினார்

மேலும் ரஜினியை மட்டுமின்றி அவர் கமல்ஹாசனையும் கடுமையாக விமர்சனம் செய்து இந்த கூட்டத்தில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது