வைகோ குற்றச்சாட்டுக்கு சீமான் பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று சீமான் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை பத்திரிகையாளர்கள் முன்வைத்து ஆவேசமாக பேசினார். தன்னை பற்றி ஜாதிரீதியாக மீம்ஸ் போடுவதாகவும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன்னுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் கூறிய வைகோ, விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனுடன் சீமான் புகைப்படமே எடுக்கவில்லை என்றும், புலிகள் பெயரை சொல்லி வெளிநாட்டு தமிழர்களிடம் சீமான் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்
வைகோவின் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து கருத்து கூறிய சீமான், 'காவிரி உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தமிழகமே போராட்டக்களமாக இருக்கும் இந்த நேரத்தில் அவருடைய குற்றச்சாட்டுக்கு கருத்து சொல்ல என்ன இருக்கின்றது, அவர் பெரியவர் ஏதோ கோபத்தில் பேசியுள்ளார். காலம் எல்லோருக்கும் என்னை பற்றி புரியவைக்கும். நமக்கு நிறைய வேலை உள்ளது என்று சீமான் கூறியுள்ளார்.
மேலும் வைகோவின் கருத்துக்கு எந்த எதிர்ப் பதிவும் யாரும் போடவேண்டாம் என்றும், தொடர்ச்சியாக எல்லா ஊர்களிலும் போராட்டத்தை முன்னெடுப்பதில் கவனத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தனது கட்சியினர்களுக்கு அவர் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கு கூட மணிக்கணக்கில் விளக்கம் அளிக்கும் சீமான், பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்தது உள்பட பல முக்கிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்த வைகோவின் குற்றச்சாட்டுக்களுக்கு நேரடியாக பதிலளிக்காமல் இருப்பது அனைவரையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com