விவசாயி உயிருடன் இல்லையா? தேர்தல் ஆணையத்திற்கு சீமான் கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
தேர்தல் ஆணையம் உயிர் உள்ள விலங்குகளின் சின்னத்தை தருவதில்லை என்று கடந்த சில ஆண்டுகளாக முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி என்ற சின்னத்தை கொடுத்துள்ளதால் விவசாயி உயிருடன் இல்லையா? என்ற கேள்வியை சீமான் எழுப்பியுள்ளார்.
உயிருள்ள விலங்குகளின் சின்னங்களை அரசியல் கட்சிகளுக்கு தந்தால் அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட விலங்குகளையே பிரச்சாரத்திற்கு அழைத்து சென்று கொடுமைப்படுத்துவதாக வந்த புகார்களை அடுத்தே தேர்தல் ஆணையம் இனிமேல் உயிருள்ள விலங்குகள் சின்னத்தை தருவதில்லை என்ற முடிவை எடுத்தது. இந்த அடிப்படை உண்மையை கூட புரிந்து கொள்ளாமல் விவசாயி உயிருடன் இல்லையா? என்ற கேள்வியை சீமான் கேட்டிருப்பதாக நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மேலும் உயிரோடு இல்லாத விவசாயியை நாங்கள் உயிரோடு மீட்டெடுப்போம் என்று சீமான் தனது பேட்டியில் கூறியுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் டெபாசிட் கூட வாங்காத சீமான் கட்சி, விவசாயியை மீட்டெடுப்பார்களா? முதலில் டெபாசிட் வாங்கி அவர்கள் கட்சியின் வேட்பாளர்களை மீட்டெடுக்கட்டும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலிலாவது மக்களின் ஆதரவை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments