ராகவா லாரன்ஸின் ஆவேச அறிக்கைக்கு பின் வருத்தம் தெரிவித்த அரசியல் தலைவர்

பிரபல நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் நேற்று பெயர் குறிப்பிடாமல் ஒரு அரசியல் தலைவர் குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையை படிப்பவர்களுக்கு அவர் நாம் தமிழர் கட்சியின் சீமான் குறித்துதான் கூறியிருந்தார் என்பது புரிந்திருக்கும்.

இந்த நிலையில் இந்த அறிக்கை குறித்து இன்று சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவர் பதிலளித்ததாவது: 'லாரன்ஸ் மீதும் அவருடைய சேவை மீதும் எப்போதும் எனக்கு மதிப்பு உண்டு. என் கட்சியைச் சார்ந்த யாராவது ஒருவர் புரிதல் இல்லாமல் விமர்சித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அவர் யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எனக்கும் என் கட்சிக்கும் கெட்ட பெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பலர் சமூக வலைதளங்களில் போலி கணக்குகளில் இயங்கி வருகின்றனர். அவர்கள் யாரேனும் கூட இப்படி செய்திருக்க வாய்ப்பு அதிகம். இருப்பினும் தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறினார்.

சீமானின் இந்த பதிலை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது

More News

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததில் இருந்தே அணியில் யார் யார் இடம்பெறுவார்கள்

கமல்ஹாசன் விளம்பர வீடியோவுக்கு வந்த சிக்கல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  கடந்த சில நாட்களாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது வாக்குறுதிகளை அளிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பிரபலம்

மணிரத்னம் இயக்கவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் அவ்வபோது இணையும் பிரபலங்கள் குறித்த செய்தியை பார்த்து வருகிறோம்

துலாபார நிகழ்ச்சியின்போது மண்டை உடைந்தது: காங்கிரஸ் வேட்பாளர் காயம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் சசிதரூர் துலாபார நிகழ்ச்சியின்போது காயமடைந்தார்.

ஒரே ஒரு வார்த்தை: பலாத்காரம் செய்ய வந்த வாலிபரை தலைதெறிக்க ஓடவிட்ட பெண்!

பாலியல் பலாத்காரம் செய்ய வந்த வாலிபர் ஒருவரை ஒரே ஒரு வார்த்தை கூறி தலை தெறிக்க ஓட வைத்த பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது