ரஜினி நல்லவர் என்றால் 8 கோடி தமிழர்கள் யார்? சீமான்
- IndiaGlitz, [Saturday,April 28 2018]
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராடும் பெரும்பாலான கட்சிகள் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தை விட்டுவிட்டு ரஜினியை எதிர்ப்பதிலும் விமர்சனம் செய்வதிலும் தீவிர கவனம் செலுத்தி வருவதாக அரசியல் விமர்சர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கல்லணையில் காவேரி உரிமை மீட்புக்குழு சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது,. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'ரஜினிகாந்த்தை யாராவது நல்லவர் என்று சொன்னால், 8 கோடி தமிழர்களும் நல்லவர்கள் இல்லை என்பதே அதன் அர்த்தம் என்றும் அடுத்தவர் துயரத்திற்கு இரங்காதவர், கவலைப்படாதவர் எப்படி நல்லவராக இருக்க முடியும் என்றும் சீமான் கூறினார்.
இதே நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, 'மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகா வழியாக தமிழ்நாட்டிற்கு வந்த ரஜினிகாந்த், தாமும் தமிழன் தான் என்று சொல்வது பொய் என்று கூறினார். இவர்கள் இருவருடைய பேச்சில் பெரும்பாலும் ரஜினியை விமர்சனம் செய்வதிலேயே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது