நயன்தாராவின் அப்பாவாக நடிக்கிறாரா சீமான்? தந்தை - மகள் போராட்டம் தான் கதையா?

  • IndiaGlitz, [Wednesday,January 03 2024]

நடிகை நயன்தாராவின் அடுத்த படத்தில் சீமான் அவருடைய தந்தையாக நடிக்க இருப்பதாகவும் தந்தை மகள் குறித்த போராட்டம் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படங்களில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன்’. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா இருவரும் அக்கா தங்கை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் பிரதீப் ரங்கநாதன் தந்தையாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் விவசாயிகள் குறித்த பிரச்சனையை பேசும் படமாக இருக்கும் என்றும் சீமான் ஒரு விவசாயியாக நடித்திருக்கிறார் என்றும் இந்த படத்தில் தந்தை மகள் மற்றும் தந்தை மகன் இடையே நடக்கும் தினசரி போராட்டம் குறித்த காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தில் சீமான் இணைந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More News

'லேபிள்' கொடுத்த வெற்றி.. அருண்ராஜா காமராஜ் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகையா?

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சமீபத்தில் முடிவடைந்த 'லேபிள்' என்ற வெப் தொடர் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக கடைசி எபிசோடில்  இதுவரை எழுப்பப்பட்ட அனைத்து

திடீரென குறைந்த பணப்பெட்டியின் மதிப்பு.. பிக்பாஸ் வைத்த ட்விஸ்ட்.. போட்டியாளர்கள் அதிர்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 94 வது நாளாக இன்று நடைபெற இருக்கும் நிலையில் அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நிறைவடைய உள்ளதால் விறுவிறுப்பு அதிகமாகி உள்ளது  

எனக்கு 8,822 வயசு.. ராம் இயக்கிய 'ஏழு கடல் ஏழு மலை' கிளிம்ப்ஸ் வீடியோ..!

'ஒருத்தரை விட்டுட்டு ஒருத்தர் போறதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும், ஆனால் ஒருத்தர் கூட ஒருத்தர் போறதுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கும், அது  காதல்'  என்ற வசனத்துடன் தொடங்கும்

குடல உருவி மாலையா போட்டு காவல் காத்து நின்னாரு.. 'கேப்டன் மில்லர்' சிங்கிள் பாடல்..!

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'கோரனாறு' என்ற பாடல் சற்றுமுன்

மாயா, பூர்ணிமா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே பிளேயர் தான்: முகத்திரையை கிழித்த விஷ்ணு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்கில்  ஒரு போட்டியாளர் தனது சக போட்டியாளர் ஒருவரை அழைத்து அவரது 93 நாள் பயணம் குறித்தும் அவரது நல்லது கெட்டது குறித்தும் பேச வேண்டும் என்று கூறப்பட்டது.