close
Choose your channels

என்னுடன் தங்கினால் 7000 டாலர் தருகிறேன்.. நடிகைக்கு மெசேஜ் அனுப்பிய 100 வயது நபர்.!

Wednesday, October 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

100 வயது நபர் ஒருவர் பிரபல நடிகையிடம் ’என்னுடன் தங்கினால் 7000 முதல் 8000 டாலர் தருகிறேன்’ என்று மெசேஜ் அனுப்பியதாக அந்த நடிகை சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சிகளில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை சீமா சஜ்தே என்பவர் சமீபத்தில் நடந்த வெப் தொடர் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, 100 வயது நபர் தனக்கு மெசேஜ் அனுப்பியதாகவும், அந்த மெசேஜில் தன்னுடன் தங்கினால் மாதம் 7000 முதல் 8000 டாலர் வரை தருவதாக கூறியதாகவும் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெசேஜ் அனுப்பிய நபர் யார் என தெரியவில்லை என்றும், என்னை தன்னுடன் வைத்திருக்க விரும்புவதாகவும், அதற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு பெரும் தொகையை கொடுப்பதாக அந்த நபர் மெசேஜ் அனுப்பியதாகவும் கூறினார். "அவரை பார்க்க 100 வயது ஆள் போல் இருந்தார், எனக்கு ரொம்ப விசித்திரமாக இருந்தது. 'உங்களுடன் நான் தங்கினால் மகிழ்ச்சியாக இருப்பேன். அதற்காக மாதம் 7000 முதல் 8000 டாலர் பட்ஜெட்டாக தருகிறேன்' என்று கூறிய அவரைப் பார்த்ததும் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தது," என்று கூறினார் நடிகை சீமா சஜ்தே.

நெட்பிளிக்ஸ் ரியாலிட்டி ஷோ "Fabulous Lives of Bollywood Wives" என்ற வெப்தொடரின் மூன்றாவது சீசனில் சீமா சஜ்தே நடித்து இருந்த நிலையில் இந்த தொடரின் புரமோஷனில் பிசியாக உள்ளார். சீமா தனது கணவர் சொகைல் கான் என்பவரை பிரிந்து விட்ட நிலையில், தற்போது அடுத்த திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்பதும், தொழில் அதிபர் விக்ரம் என்பவருடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment