close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' குறித்த முக்கிய அறிவிப்பு

Friday, June 15, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தேதி மற்றும் ரிலீஸ் தேதி ஆகிய இரண்டு முக்கிய தேதிகளை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் நாயகி சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே முடிவடைந்து அவர் இந்த படத்திற்கான டப்பிங்கையும் முடித்துவிட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பு இம்மாதம் 19ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் அன்றைய தினம் படப்பிடிப்பு முடிவடைவதை அடுத்து ஃபேர்வெல் பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த படம் நாம் ஏற்கனவே அறிவித்தபடி வரும் வினாயகர் சதுர்த்தி தினத்தில் அதாவது செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தகவல்களையும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment