ஆகஸ்ட் 15ஆம் தேதியை குறிவைக்கின்றதா 'சீமராஜா'?

  • IndiaGlitz, [Friday,July 20 2018]

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் 24ஏம் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வினாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இருப்பினும் இந்த தகவலை இன்று இரவு 7 மணிக்கு உறுதி செய்து கொள்வோம்.

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவும், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.