தேடி வந்த கனடா குடியுரிமை: ஏ.ஆர்.ரஹ்மானின் ஆச்சரியமான பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் நடிகர் அக்சயகுமார் சமீபத்தில் குடியுரிமை குறித்த சர்ச்சையில் சிக்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் கனடா நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்ததாகவும், அவரது இந்திய குடியுரிமை குறித்து கேள்வி எழுப்பியும் நெட்டிசன்கள் செய்த பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் அவருடைய தேசப்பற்று மற்றும் தேர்தல் வாக்களிக்காதது ஏன் என்பது குறித்து நெட்டிசன்கள் தொடர் கேள்விகளை எழுப்பியதால் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்தார். இதுகுறித்த செய்தியை நாம் ஏற்கனவே பார்த்தோம். தன்னிடம் கனடா நாட்டின் பாஸ்போர்ட் இருந்தாலும் தன்னுடைய இதயம் இந்தியாவில் தான் இருப்பதாகவும், தான் இந்தியாவுக்கு மட்டுமே வரி கட்டுவதாகவும், தான் தன்னுடைய தாய்நாட்டை என்றும் நேசிப்பவராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
அக்சயகுமார் பல வருடங்களுக்கு முன் கனடா நாட்டின் சிறப்பு குடியுரிமையை பெற்றவர் என்பதும், இருப்பினும் அவர் கனடாவிற்கு கடந்த சில ஆண்டுகளாக செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அக்சயகுமாரை போலவே இன்னொரு பிரபலத்திற்கும் கனடா நாடு சிறப்பு குடியுரிமையை கொடுக்க முன்வந்தது என்பதும், அந்த குடியுரிமையை மறுத்து 'இந்தியா தான் எனது குடும்பம் என்று ஒருவர் கூறியதும் உங்களுக்கு தெரியுமா? அவர் வேறு யாருமில்லை, ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவிற்கே பெருமை தேடி தந்த நமது தமிழரான ஏ.ஆர்.ரஹ்மான் தான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவின் மேயர் ரஹ்மான் என்பவர் கனடா நாட்டின் குடியுரிமையை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு கொடுக்க முன்வந்தபோது அதனை நாகரீகமான முறையில் மறுத்தவர்தான் நமது ஆஸ்கார் நாயகன். ஏனெனில் அவரது சொந்த மண் தமிழ்நாடு என்பதால்.
இதுகுறித்து ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டபோது, 'கனடா நாட்டின் மேயர் எனக்கு குடியுரிமை கொடுக்க முன்வந்ததற்கு நன்றி. நான் அவருக்கு என்றும் கடமைப்பட்டவனாக உள்ளேன். ஆனால் தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக உள்ளேன். இந்தியாவில் தான் எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் எனது மக்கள் உள்ளனர். நீங்கள் இந்தியாவிற்கு அடுத்தமுறை வருகை தரும்போது எங்கள் இசைப்பள்ளிக்கு வருகை தாருங்கள். மேலும் இந்தியாவும் கனடாவும் இணைந்து இசை நிகழ்ச்சிகளை அதிகமாக வழங்க ஆர்வமுடன் உள்ளேன்' என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த பதிலால் அவருடைய நாட்டுப்பற்று எந்த அளவுக்கு இருக்கின்றது என்பதை சொல்லவும் வேண்டுமா? கனடா நாட்டின் குடியுரிமையை அவர் மறுத்தபோதிலும் அவரது பெயரில் ஒண்டோரியாவில் ஒரு சாலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com