சிம்பு, சூர்யா தனுஷ் நடிகை மீது தேச துரோக வழக்கு

  • IndiaGlitz, [Tuesday,August 23 2016]

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பல ஆண்டுகளாக பகை இருந்து வரும் நிலையில் பாகிஸ்தான் நல்ல நாடு என்று பேட்டி ஒன்றில் கூறி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ஒருவர். சிம்புவுடன் 'குத்து', தனுஷுடன் 'பொல்லாதவன் உள்பட பல படங்களில் நாயகியாக நடித்த ரம்யாதான் அந்த நடிகை
நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ரம்யா, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ' மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியிருப்பது போல் பாகிஸ்தான் நரக நாடு கிடையாது. அது ஒரு நல்ல நாடு. அங்குள்ள மக்கள் நம்மை போலவே உள்ளனர்'' என்று கூறியுள்ளார்.
ரம்யாவின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பெங்களூரு பாஜகவினர் அவருக்கு எதிராக தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநில நீதிமன்றம் ஒன்றில் ரம்யா மீது தேசத்துரோக வழக்கு ஒன்றை வழக்கறிஞர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு வரும் 27ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் தான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும், இதற்காக தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் ரம்யா கூறியுள்ளார்.

More News

'அஜித் 57' படத்தின் டைட்டில் குறித்த முக்கிய தகவல்

அஜித் நடித்து வரும் 57வது படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு தற்போது ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

நாகசைதன்யாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கவுதம் மேனன்

ஒரு ஹீரோ நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது என்பது ஒரு இக்கட்டான நிலை. இரண்டு படங்களின் வசூலும் பாதிக்கும்...

மதுரைக்கு சிம்பு, காஞ்சிக்கு டி.ஆர்

தமிழக பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் கலந்து கொள்ளவுள்ள எட்டு அணிகளின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

2.0-வுக்கு முன்பு ரிலீஸ் ஆகும் ரஜினி படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்...

'ரெமோ' தயாரிப்பாளரின் புத்திசாலித்தனமான ஐடியா

தமிழ் திரையுலகினர்களுக்கு சவால் கொடுக்கும் ஒரே விஷயம் திருட்டு டிவிடி என்னும் அரக்கர்கள்தான். என்னதான் சட்டங்கள் போட்டு விழிப்புடன் இருந்தாலும்...