இந்திய அணியின் படுதோல்வி எதிரொலி: தோனி வீட்டுக்கு பாதுகாப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பெளலிங், பீல்டிங், பேட்டிங் என அனைத்துமே ஒரு கத்துக்குட்டி அணி போல் மிக மோசமாக இருந்தது. ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா ரன்கள், ரன் அவுட் மிஸ்ஸிங், நோ பால்கள் என இந்திய அணி வீரர்கள் பொறுப்பின்றி ஆடினர். அதுமட்டுமின்றி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற இடத்தில் இருக்கும் கோஹ்லி உள்பட இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பியாதால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஓரளவு நன்றாக ஆடிக்கொண்டிருந்த பாண்டியாவை, ஜடேஜா ரன் அவுட் ஆக்கியது கொடுமையிலும் கொடுமை.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி காரணமாக இந்திய அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கான்பூரில் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விராத் கோஹ்லி, தோனி, யுவராஜ்சிங், அஸ்வின் உருவப்படங்கள் எரிக்கப்பட்டன. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பால்டி ஆகிய பகுதிகளில் கிரிக்கெட் ரசிகர்கள் டிவியை தாறுமாறாக போட்டு உடைத்துள்ளனர். இதனால் பல பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தோனி வீடு மட்டுமின்றி கேப்டன் விராட் கோலி உள்பட முன்னணி வீரர்கள் வீடுகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments