இந்திய அணியின் படுதோல்வி எதிரொலி: தோனி வீட்டுக்கு பாதுகாப்பு

  • IndiaGlitz, [Monday,June 19 2017]

நேற்று நடைபெற்ற சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

கிரிக்கெட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் பெளலிங், பீல்டிங், பேட்டிங் என அனைத்துமே ஒரு கத்துக்குட்டி அணி போல் மிக மோசமாக இருந்தது. ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா ரன்கள், ரன் அவுட் மிஸ்ஸிங், நோ பால்கள் என இந்திய அணி வீரர்கள் பொறுப்பின்றி ஆடினர். அதுமட்டுமின்றி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற இடத்தில் இருக்கும் கோஹ்லி உள்பட இந்திய அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்பியாதால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஓரளவு நன்றாக ஆடிக்கொண்டிருந்த பாண்டியாவை, ஜடேஜா ரன் அவுட் ஆக்கியது கொடுமையிலும் கொடுமை.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி காரணமாக இந்திய அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கான்பூரில் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விராத் கோஹ்லி, தோனி, யுவராஜ்சிங், அஸ்வின் உருவப்படங்கள் எரிக்கப்பட்டன. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பால்டி ஆகிய பகுதிகளில் கிரிக்கெட் ரசிகர்கள் டிவியை தாறுமாறாக போட்டு உடைத்துள்ளனர். இதனால் பல பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தோனி வீடு மட்டுமின்றி கேப்டன் விராட் கோலி உள்பட முன்னணி வீரர்கள் வீடுகளுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

More News

'பீச்சாங்கை', 'உரு', 'தங்கரதம்' ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்கள்

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வாரமும் மூன்று முதல் ஐந்து படங்கள் வரை ரிலீஸ் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் வெளியான 'பீச்சாங்கை', 'உரு', 'தங்கரதம் ஆகிய படங்களின் சென்னை வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்...

ஏ.ஆர்.ரஹ்மானின் 'நேற்று இன்று நாளை': லண்டனில் சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் கடந்த 1992ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த ஆண்டுடன் அவரது இசைச்சேவைக்கு 25வருடம் நிறைவு பெற்றுள்ளது...

கவுதம் கார்த்திக்கின் 'ரங்கூன்' வசூல் எப்படி?

கவுதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெளியான 'ரங்கூன்' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருந்தது என்பதை கடந்த வாரமே பார்த்தோம்...

பாகுபலி 2: 50வது நாளை கடந்தும் அசர வைக்கும் வசூல்

எஸ்.எஸ். ராஜமெளலியின் பிரமாண்டமான இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா ,சத்யராஜ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் சமீபத்தில் 50வது நாள் என்ற மைல்கல்லை கடந்தது...

சொன்ன வார்த்தையை காப்பாற்றுங்கள்: ரஜினியிடம் அய்யாக்கண்ணு கோரிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் தனிக்கட்சி  தொடங்கி அரசியலில் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த சில மாதங்களாக அவரை பிரபல அரசியல்வாதிகளும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரையுலக பிரமுகர்களும் சந்தித்து வருகின்றனர்...