கூவத்தூரில் 144 தடை உத்தரவு. போலீசார் அதிரடி

  • IndiaGlitz, [Tuesday,February 14 2017]

கூவத்தூரில் சசிகலா ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதும், அவர்களுடன் சசிகலா ஆலோசனை செய்து கொண்டிருப்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் கூவத்தூரில் இருக்கும் எம்.எல்.ஏக்களை சந்திக்க முதல்வர் ஓபிஎஸ் அங்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதே நேரத்தில் கூவத்தூர் நோக்கி சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோவளம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் கூவத்தூரில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு 144 தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது. கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூவத்தூர் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கூவத்தூரில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்த 144 தடை உத்தரவு என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

More News

யார் இந்த எடப்பாடி பழனிச்சாமி? முதல்வர் நாற்காலி கிடைக்குமா?

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதால் முதலமைச்சர் ரேஸில் இருந்து அவர் விலக்கப்பட்டுள்ளார்.

சுந்தர் சியின் கனவுப்படம் 'சங்கமித்ரா'வின் நாயகி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ள 'சங்கமித்ரா' திரைப்படத்தை பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கவுள்ளார் என்பது அறிந்ததே.

மேல்முறையீடு செய்வோம். தம்பித்துரை

சசிகலா உள்பட மூவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சசிகலா ஆஜராக வேண்டிய நீதிபதி பெயர் அறிவிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா அவர்களின் தீர்ப்பை இன்று காலை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் உடனே ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

சசிகலா இதற்கும் பதில் சொல்ல வேண்டும். கவுதமி

சசிகலாவுக்கு தற்போது ஊழல் வழக்கிற்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. அவர் மறைந்த முதல்வர் அம்மாவின் மரணத்திற்கும் பதில் சொல்ல வேண்டும் என்று இன்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து நடிகை கவுதமி கூறியுள்ளார்.