நீங்களும் Success மனிதராக மாறனுமா? இருக்க வேண்டிய முக்கியமான குணங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மனிதராகப் பிறந்த எல்லோருக்குமே பெரிய பெரிய கனவுகளும் ஆசைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இந்தக் கனவுகளை எல்லோராலும் நிறைவேற்றிக் கொள்ள முடிவதில்லை. காரணம் தங்களுடைய கனவுகளைச் சரியாக அடையாளம் கண்டுகொண்ட அவர்கள் அதற்கான உழைப்பை செலுத்தத் தவறிவிடுகின்றனர்.
இன்னும் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்தாலும் சோம்பேறி தனத்தின் காரணமாகத் தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை, கோட்டைவிட்டு ஏக்கப் பெருமூச்சு விடுவதையும் பார்த்திருப்போம். ஆக ஒருமனிதன் Successful மனிதராக இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு என்று சில முக்கியமான குணங்கள் இருக்க வேண்டும்.
1.ஒருவர் தொடர்ந்து தனது கனவை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருக்கும் மனிதர்களால் மட்டுமே வெற்றிக் கனியைச் சுவைக்க முடியும். மாவட்ட ஆட்சியராக விரும்பும் ஒரு மாணவன் அதற்காகத் தினம்தோறும் படிக்க வேண்டிய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியில்லாம் ஏதோ ஒரு வருடம் உட்கார்ந்து படித்து மாவட்ட ஆட்சியராக மாறிவிடலாம் என்பதெல்லாம் நிஜத்தில் நடக்காத காரியம்.
ஏனெனில் உண்மையில் படிக்க வேண்டும், அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல் தினம்தோறும் இருந்தால் மட்டுமே அந்த மாணவர் தேர்வில் வெற்றிபெறும் அளவிற்கு மன வலிமையை வளர்த்துக் கொள்ள முடியும். இதற்கு மாறாக ஒரு கோச்சிங் சென்டரில் சேர்ந்து ஒரு வருடம் கடினமாகப் படித்து உடனே மாவட்ட ஆடசியர் ஆகிவிடலாம் என்று கனவு கண்டால் ஏமாற்றம் மட்டுமே மிச்சமாக கிடைக்கும். ஆக ஒரு மனிதன் தனது வெற்றிக்காக, கனவுக்காகத் தினம்தோறும், தேடலையும் உழைக்கும் மனப்பக்குவத்தையும் வளர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2.வாய்ப்புக் கிடைத்தால் அதைத் தவறவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் அளவிற்கு மனப்பக்குவம் வேண்டும். அதாவது ஒரு தேசிய தடகள வீரருக்கு சர்வதேசப் போட்டியில் விளையாட வாய்ப்புக் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அந்த வீரர் தனக்கு வாய்ப்புக் கிடைத்த நேரத்தில் சோம்பேறித்தனமாக இருந்துகொண்டு, காரணங்களைச் சொல்லி தட்டிக் கழித்தால் வாழ்க்கை வீணாகிவிடும்.
அதனால் நாம் சோர்ந்து போகும்போது வேறு ஒருவர் வந்து நம்மைத் தேற்றுவார் என்ற எதிர்பார்ப்பை விட்டுவிட்டு நாமாகவே நம்முடைய சோர்வில் இருந்து விடுபடக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி சோர்வில்லாம் நம்மைப் புத்துணர்ச்சியாக வைத்துக்கொண்டால் மட்டுமே போதுமானது வெற்றிக்கான வழியைக் கண்டுபிடித்து விடலாம்.
3. தோல்வியைக் கண்டு துவண்டுவிடக் கூடாது. எடுத்த உடனே வெற்றிக் கிடைத்துவிட வேண்டும் என்று நம்புவது படு முட்டாள் தனமான எதிர்பார்ப்பு என்பதையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது ஒரு முயற்சியின்போது நாம் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கிறோம், மேலும் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறோம். ஆனாலும் தோல்வி வருகிறது. இந்தத் தோல்வியை எளிதாகக் கடந்துவிட்டு அடுத்தக் கட்டம் நோக்கி நகர்ந்து செல்ல தெரிந்திருக்க வேண்டும்.
இந்த 3 அத்யாவசியமான குணங்கள் மட்டுமே ஒருவரை வாழ்க்கையில் பெரிய மனிதர்களாக முன்னேற்றும். ஆக, ஒருவரது வெற்றி வேறு எங்கோ இல்லை, நம்மிடம்தான் இருக்கிறது என்பதை முதலில் நம்பத் தெரிந்த மனிதர்களால் மட்டுமே வாழ்வில் வெற்றியை அடைய முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments