திருப்பதி பெருமாள் ரகசியங்கள்: ஸ்ரீகவி சொல்லும் அற்புத தத்துவங்கள்

  • IndiaGlitz, [Friday,August 09 2024]

ஆன்மீக சிந்தனையாளர் ஸ்ரீகவி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் திருப்பதி பெருமாள் மற்றும் திருமலை நம்பி பற்றி ஆழமாக ஆராய்ந்துள்ளார். திருப்பதி கோயிலின் அமைப்பு, பெருமாள் சிலையின் ரகசியங்கள், திருமலை நம்பியின் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக அம்சங்களை அவர் விளக்கியுள்ளார்.

ஸ்ரீகவி கூறுகையில், வைணவத்தில் ஆச்சார்யா வின் திருவடியை பற்றியே ஆண்டவருடைய திருவடியை பற்றி பேசுவார்கள் என்றும், திருமலையில் காண வேண்டிய இடங்கள் பற்றியும் விளக்கியுள்ளார். பெருமாளின் கையில் உள்ள ஸ்திரம் பற்றிய ரகசியங்களை உடைத்து, திருப்பதி கோயிலின் அமைப்பு மற்றும் அதன் தத்துவம் பற்றி விரிவாக பேசியுள்ளார்.

திருமலை நம்பியை எப்படி தரிசிக்க வேண்டும், அது திருப்பதியில் எங்கே இருக்கிறது என்றும், அதன் சிலை அமைப்பு தத்துவத்தையும் சொல்லியுள்ளார். திருமலை நம்பிகள் வரலாற்றை சொல்லியதோடு, தனக்கு திருமலை நம்பி மேல் எப்படி பக்தி பிறந்தது என்றும், அந்த பக்தி எப்படி வந்தது என்ற வரலாற்றை ஜெயா டிவியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது நடந்த பக்தி அதிசியம் பற்றி பேசுகிறார். மேலும் குன்றக்குடி வைத்தியநாதன் கூட இருந்த நட்பை பற்றியும் பேசுகிறார்.

இந்த வீடியோ, திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் இந்த வீடியோவை பார்க்கலாம்