ஓவியாவுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய டாஸ்க்? அவ்வளவும் நடிப்பா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று மாலையில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சுதான் எங்கு பார்த்தாலும் இருந்தது. ஓவியா வெளியேறிவிட்டார், மருத்துவமனையில் அனுமதி, மருத்துவர்களின் கவுன்சிலிங், மீண்டும் ஓவியாவுடன் சேனல் நிர்வாகம் பேச்சுவார்த்தை, கமலுடன் உரையாடல், மீண்டும் பிக்பாஸ் வீட்டில் ஓவியா என மணிக்கொரு தரம் ஓவியாவின் பிரேக்கிங் நியூஸ் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தது.
ஓவியா இல்லையென்றால் பிக்பாஸ் இல்லை என்பது கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது. நமக்கே தெரிந்த இந்த உண்மை கோடிக்கணக்கில் முதலீடு செய்த சேனலுக்கு தெரியாதா? இந்த நிலையில் நிகழ்ச்சியின் பரபரப்பை மேலும் அதிகரிக்க, ஓவியாவுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய டாஸ்க்தான் கடந்த சில நாட்களாக நடந்த நிகழ்ச்சி என்று செய்திகள் பரவி வருகிறது.
ஆரவ்வுடன் காதல், பின்னர் மோதல், எந்த டாஸ்க்கிலும் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது, உண்ணாவிரம், நீச்சல் குளத்தில் தற்கொலை முயற்சி என அனைத்துமே பிக்பாஸால் ஓவியாவுக்கு கொடுக்கப்பட்ட ரகசிய டாஸ்க் என்றும் இந்த டாஸ்க்கில் ஓவியாவுடன் பிக்பாஸும் இணைந்து வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 'புதிய பறவை' படத்தின் கிளைமாக்ஸில் சிவாஜிகணேசன், சரோஜாதேவியை பார்த்து 'அவ்வளவும் நடிப்பா? என்று ஆச்சரியத்துடன் கேட்பாரே, அந்த கேள்வியை இன்று அனைத்து பார்வையாளர்களும் கேட்க அதிக வாய்ப்பு இருக்கின்றது.
ஸ்கிரிப்ட்படி வெற்றிகரமாக டாஸ்க்கை முடித்த ஓவியாவுக்கு நடத்தும் பாராட்டு விழா தான் இன்றைய ஓவியா-கமல் உரையாடலாக இருக்கும் என்றும், இந்த உரையாடலுக்கு பின் ஓவியாவுக்கு அவரே எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை கமல் கொடுக்கவுள்ளதாகவும் செய்திகள் உலாவி வருகின்றது.
எனவே இன்றைய மற்றும் நாளைய நிகழ்ச்சி பரபரப்பின் உச்சத்துக்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments